இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக ஆர்ப்பாட்டம்

இடஒதுக்கீடு வழங்கக்கோரி  பாமக ஆர்ப்பாட்டம்
X

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 1951 ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 38 ஆண்டுகளுக்கு ஒரே தொகுப்பாக இருந்தது. 1989ம் ஆண்டில் வன்னியர் சங்கத்தின் போராட்டத்தை தொடர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டு பிரிவு உருவாக்கப்பட்டது. பின் 32 ஆண்டுகளாக அதே நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை இரண்டு தொகுப்புகளாக மட்டும் பிரித்து வழங்குவது எந்த வகையிலும் நியாயம் அல்ல. அது சமூகத்திற்கு வலு சேர்க்காது. வன்னியர் சங்கத்தின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கான ஆணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் பாமகவினர் தெரிவித்தனர்.

Tags

Next Story