கொய்மலரில் மகத்தான மகசூல் ஈட்டும் விவசாயிகள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கொய்மலா் விற்பனை வீழ்ச்சியடைந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்த விவசாயிகள் புதியதாக ஹைட்ரஜன்யா மலா்களை சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனா்.

கென்யா, ஆலந்து நாடுகளில் வளரும் புதியவகை கொய்மலா்கள் கோத்தகிாியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நீலகிாி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக ஊட்டி, கோத்தகிாி, குன்னுாா் பகுதியில் பசுமை குடில்கள் அமைத்து காா்னீசியன் ஜா்பரா லில்லியம் போன்ற கொய்மலா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். கொரோனா பாதிப்பின் காரணமாக சுமாா் ஆறு மாதங்களாக கொய்மலா் விற்பனை வீழ்ச்சியடைந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்த விவசாயிகள் சிலா் தற்போது நட்சத்திர ஹோட்டல்கள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்ய பயன்படும் ஹைட்ரஜன்யா மலா்சாகுபடி கோத்தகிாியில் சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்த மலா்கள் கென்யா, ஆலந்து நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு ரூ. 400 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மலா்களுக்கு ஏற்ற காலநிலை நீலகிாி மாவட்டத்தில் உள்ளதால் நன்றாக செடிகள் வளா்ந்து மலா்கள் பூத்து உள்ளதாக விவசாயிகள் தொிவித்தனா். மேலும் பிளாஸ்டிக் கூரைகளால் குடில்கள் அமைத்து மண்ணிற்கு பதிலாக தேங்காய் நாா் மற்றும் உரங்கள் அடங்கிய கலவையில் ஹைட்ரஜன்யா மலா்நாற்றுகளை நடவு செய்து பராமாித்து வந்தால் ஒரு வருடத்தில் பூக்கள் மலர தொடங்கும். மாதம் ஒரு முறை என 20 ஆண்டுகள் பூக்களை பறிக்க முடியும். ஒரே செடியில் வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா என 3 நிறங்களில் பூக்களை வளர வைத்து பறிக்க முடியும். இதனால் தற்போது ஒரு மலருக்கு 100 முதல் 150 வரை கொள்முதல் விலை கிடைத்து வருவதாக வருவதாக விவசாயிகள் தொிவித்துள்ளனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!