பேரி கார்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம் பொதுமக்கள் குற்றச்சாட்டு

பேரி கார்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம் பொதுமக்கள் குற்றச்சாட்டு
X

உதகை நகரில் மையப்பகுதியில் உள்ள சேரிங் கிராஸ் மற்றும் கேஸினோ சந்திப்பு சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு பேரி கார்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு தற்பொழுது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளதால் நகரில் பல இடங்களுக்கு செல்லும் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த வாகனங்கள் மூலமே இம்மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் உதகை நகரில் பல சாலைகளில் இரும்பு தடுப்பு பேரி கார்டுகள் வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும் உள்ளூரில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்கள் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் விரைவில் ஓர் இடத்திற்குச் சென்று வர இயலாத நிலையில் அவர்களிடம் அதிகமாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் வாடகை பெறுவதாகவும் கூறப்படுகிறது.இதில் குறிப்பாக உதகை நகர மையப்பகுதியில் உள்ள சேரிங் கிராஸ் சாலை வழியாக மைசூர் மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள் அதிகமாக சென்று வரும் நிலையில் தாவரவியல் பூங்கா , ரோஜா பூங்கா தொட்டபெட்டா மலைச் சிகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல இந்த இடத்திலிருந்து சாலை பிரிந்து செல்கிறது.

ஐந்து பிரிவுகளாக செல்லும் இச்சாலையை பயன்படுத்தப்படும் வாகன ஓட்டிகள் இடையில் வைக்கப்படும் இரும்புத் தடுப்பு பேரி கார்டுகளால் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர் மேலும் கனரக வாகனங்கள் சாலையில் செல்லும் போது திரும்ப முடியாமல் போவதால் விபத்து நடக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு பேரி கார்டுகளை அப்புறப்படுத்தி வாகனங்கள் இடையூறு இல்லாமல் சென்று வர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!