ஆற்றுநீருடன் மாசு கலப்பு : அதிகாரிகள் ஆய்வு

ஆற்றுநீருடன் மாசு கலப்பு : அதிகாரிகள் ஆய்வு
X

குன்னூர் ஆற்றில் நுரை பொங்கியதால் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் நீர், குன்னுார் பஸ்ஸ்டாண்ட் ஓடை, சிற்றாறு என்ற லாஸ் நீர்வீழ்ச்சியில் சங்கமித்து, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கலக்கிறது.இந்த நீரில், பல்வேறு கழிவுகள் கலப்பதாக புகார் உள்ளது. இந்த நீரை யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் குடிப்பதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.இந்த நிலையில் இன்று குன்னூர் ஆற்றில் நுரையுடன் கூடிய மாசு கலந்த நீர் வந்தது.

அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு தகவல் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து ஆற்று நீரை மாதிரிக்காக சேகரித்து மாசு கலந்த நீரை கோவை வேளாண் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த நீரை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிப்பதால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் நீலகிரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் வனத்துறையினரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. .

Tags

Next Story
ai as the future