குன்னூர் அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் விளை நிலங்களை சேதப்படுத்துவதால் வனத்துறையினர் 30 க்கும் மேற்பட்டோர் நெருப்பு மூட்டி விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

குன்னூர் அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் விளை நிலங்களை சேதப்படுத்துவதால் வனத்துறையினர் 30 க்கும் மேற்பட்டோர் நெருப்பு மூட்டி விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குன்னூர் அருகே கடந்த 5 நாட்களாக முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் ஆர்செடின் கிராமத்தில் இருந்த காட்டு யானைகள் இன்றுகுன்னூர் அருகே சின்ன கரும்பாலம் கிராமத்தில் முகாமிட்டுள்ளது.

பகல் நேரங்களில் வனப் பகுதிக்குள்ளும் இரவு நேரங்களில் கிராமத்திற்குள் மேரக்காய் தோட்டங்க ளுக்கும் புகுந்து விடுகிறது. அங்குள்ள மேரக்காய்களை நாசம் செய்து. வருகிறது. '

விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க குன்னூர் வனத்துறையினர் 30 க்கும் மேற்பட்டோர் கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர். விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகாமல் இருக்க நெருப்பு மூட்டி , ஓசை எழுப்பியும், பட்டாசு வெடித்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வன

த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil