வன விலங்குகளை இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை : வனத்துறை எச்சரிக்கை

வன விலங்குகளை இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை : வனத்துறை எச்சரிக்கை
X

முதுமலை வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் உலா வரும் வன விலங்குகளை இடையூறு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நீர்நிலைகளைத் தேடி மான்கள் கூட்டம் யானைகள் அதிகமாக வருகின்றன. இந்நிலையில் உதகையில் இருந்து முதுமலை செல்லும் சாலையில் உள்ள சீகூர் வனப்பகுதியில் குட்டியுடன் யானை ஒன்று ஆற்றில் நீர் அருந்த வருவதை சுற்றுலா பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி படம் பிடித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் ஆர்வக்கோளாறு காரணமாக வனவிலங்குகளை கண்டு புகைப்படம் எடுப்பது மிகவும் ஆபத்தானது என தெரிய வேண்டும் மேலும் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு செய்தால் அவர்கள் மீது வனச் சட்டம் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததோடு இதுபோல் சாலையோரங்களில் உலா வரும் வன விலங்குகளை இடையூறு செய்தால் அபராதத்தோடு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமெனவும் வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்