இன்று அமாவாசை முன்னோர்களை வழிபட உகந்த நாள் தெரிந்ததும்...தெரியாததும்...
2021 அமாவாசை
இன்று அமாவாசை முன்னோர்களை வழிபட உகந்த நாள்-தெரிந்ததும்...தெரியாததும்...
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படைத்த சாதத்தினை என்ன செய்யவேண்டும்.
அமாவாசை! நம்முடைய முன்னோர்களின் வழிபாட்டிற்கு மிக மிக உகந்த நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.
அமாவாசையில் முன்னோர்களை நினைத்து செய்யும் பூஜை வழிபாட்டு முறையினை பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், அமாவாசை பூஜை செய்யும்போது நாம் அறியாமல் செய்யக்கூடிய சில தவறுகளை பற்றியும், அந்த தவறுகளை எப்படி திருத்திக் கொள்வது என்பதை பற்றியும் இன்ஸ்டாநியூஸ் செய்திகுழுமம் தரும் பயனுள்ள தகவல் பற்றி நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
அமாவாசை தினத்தன்று அவரவர் வீட்டு வழக்கப்படி, அவரவர் வீட்டில் சமைத்த சாதத்தை முன்னோர்களுக்கு படைத்து வழிபாட்டினை மேற்கொள்கிறார்கள்.
முன்னோர்களுக்கு பூஜை அறையில் வைத்து படைத்த அந்த சாதத்தினை என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, என்ற கேள்விக்கான பதிலை முதலில் பார்க்கலாம் .
முன்னோர்களுக்கு படைத்த அந்த சாதத்தினை முதலில் கொண்டுபோய் காகத்திற்கு வைப்பது தான் சரியான முறையாகும். இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். காகத்திற்க்கு வைத்த பின்பு, இலையில் மீதமிருக்கும் சாப்பாட்டை யார் முதலில் சாப்பிடுவது என்ற பயம் நிறைய பேர் மனதில் உள்ளது. முன்னோர்களுக்கு படைத்த அந்த உணவும் ஒரு வகையில் பிரசாரத்திற்கு சமமானது தான்.
முன்னோர்களுக்கு படையலிட்டு விட்டு, பூஜை அறையில் இலையில் இருக்கும் மீதமான சாதத்தினை வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தாராளமாக சாப்பிடலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் அந்த சாதத்தினை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கக்கூடாது என்றும் சிலர் சொல்லுவார்கள்.
குறிப்பாக அமாவாசை அன்று சமைத்து முன்னோர்களுக்கு படைக்கக் கூடிய சாதத்தினை காகத்திற்கு வைத்துவிட்டு, அடுத்தபடியாக அந்த சாப்பாட்டை முதலில் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அந்த சாதத்தினை ஒரு வாய், சாப்பிட்ட பின்பு அதன் பின்பு குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். (ஒரு சிலரது வீட்டில் முன்னோர்களுக்கு படைக்கும் சாதத்தை அளவோடு வைத்து விட்டு, பூஜையறையில் வைத்த அந்த இலையோடு அப்படியே மொத்தமாக கொண்டு போய் காகத்திற்கு வைத்துவிடுவார்கள். அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது.)
அமாவாசைக்கு நம்முடைய முன்னோர்களுக்கு படைத்த அந்த சாதத்தினை காகத்திற்கு வைத்தது போக மீதமிருக்கும் சாப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் அப்படியே பூஜை அறையில் வைத்து விடக்கூடாது.
அது சரியான முறை அல்ல. வீட்டில் இருப்பவர்கள் அந்த சாதத்தை சாப்பிட்டாலும், சாப்பிடவில்லை என்றாலும் பூஜை அறையில் இருந்து அந்த இலையையும், அந்த சாதத்தையும் உடனே எடுத்துவிட வேண்டும்.
பூஜை செய்யும்போது குடும்பத்தலைவர் அதாவது, தாய் அல்லது தந்தையை இழந்த குடும்ப தலைவர் அமாவாசை பூஜையை செய்தால், அமாவாசை பூஜை முடித்த பின்பு, காகத்திற்கு சாதம் வைத்த பின்பு அந்த குடும்பத்தலைவர் தான் முதலில் உணவு சாப்பிட வேண்டும்.
அதன் பின்பு வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். காகத்திற்கும், அந்த குடும்பத் தலைவர் தான் சாதத்தைக் கொண்டு போய் வைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக ஆண்கள்தான் அமாவாசை வழிபாட்டை செய்ய வேண்டுமா? இந்த கேள்வி நிறைய பேர் மனதில் இருக்கின்றது. வீட்டில் இருக்கும் பெண்கள் சாப்பாடு சமைத்து வைத்தாலும், அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு இலை போட்டு பூஜை செய்வது பெரும்பாலும் ஆண்களே. ஆண்கள் இல்லாத சமயத்தில், அமாவாசை வழிபாட்டினை தவறவிடக்கூடாது.
ஆண்கள் வேலை சமயத்தில் வெளியே சென்றிருந்தாலும், பெண்கள் அமாவாசை வழிபாட்டினை தாராளமாக அவர்களுடைய வீட்டில் செய்யலாம். அதாவது தங்களுடைய மாமனாரோ அல்லது மாமியாருக்கோ செய்ய வேண்டிய அமாவாசை வழிபாட்டு முறையை அந்த வீட்டு மருமகள் தாராளமாக செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu