தமிழகம் முழுவதும் இன்று 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டது அமைச்சர் தகவல்.

தமிழகம் முழுவதும் இன்று 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டது அமைச்சர் தகவல்.
X

தமிழகம் முழுவதும் இன்று 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டது அமைச்சர் தகவல்.

தமிழகம் முழுவதும் இன்று 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் இதில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் 4,900 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் நேரடியாக அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 3 சக்கர வாகனம், தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை வியாபாரம் செய்பவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினால் புகாரளிக்கலாம். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044 45680200 மற்றும் 94999 32899 எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்

Next Story
ஆப்பிளில் புதிய மேக் மாடல் டேப்லெட்டுகளை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்