அம்பாசமுத்திரத்தில் திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்கிய அம்பை காவல் துறையினர்.

அம்பாசமுத்திரத்தில் திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்கிய அம்பை காவல் துறையினர்.
X

அம்பாசமுத்திரத்தில் காவல் துறையினர். திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்கினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழக முதல்வர் முழு ஊரடங்கு விதித்திருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிய நிலையில்.அம்பாசமுத்திரத்தில் உள்ள திருநங்கைகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆலோசனை படி


அம்பை காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் கண்ணன் முன்னிலையில் மற்றும் காவலர்கள் உதவியுடன் திருநங்கைகளுக்கு நிவாரண அத்யாவசிய அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற மளிகை பொருட்களை வழங்கினர்.இதில் சுமார் 25 திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசிக்கும் இடத்திற்க்கே நேரடியாக சென்று பயனாளிகளுக்கு கொடுத்தனர், இதில் பயன் பெற்ற திருநங்கைகள் தங்களது நன்றியை காவல்துறைக்கு தெரிவித்தனர்.

டி.எஸ்.பி பிரான்ஸிஸ் கூறிகையில் இந்த கொரோனா காலகட்டத்தில் தனித்திருங்கள்,வீட்டிலேயே இருங்கள், விழிப்புடன் இருங்கள் என்றும் காவல் துறைக்கும், வருவாய் துறைக்கும்,மருத்துவ துறைக்கும், நகராட்சிக்கும்,முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

Next Story
இந்த வகை ஜூஸ் மட்டும் போதும்..! நுரையீரல பளிச்சுனு சுத்தம் செஞ்சிரும்..என்னேனு பாக்கலாமா?