நாமக்கல் : ராசிபுரத்தில் திடீர் பனிமூட்டம் - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி!
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் மற்றும் ஒரு சில இடங்கள் திடீரென்று குளிர் பிரதேசமாக மாறிப் போனது. ராசிபுரத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கினர்.
குளிரும் வெயிலும் வாட்டி வதைக்கிறது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்று வட்டாரத்தில், இரவில் குளிரும், பகல் நேரங்களில் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் என்றும் இல்லாத அளவிற்கு அதிகாலை முதல் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியான பட்டணம், காக்காவேரி, சேந்தமங்கலம், வையப்பமலை, புதுப்பட்டி போன்ற இடங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது.
ரயில் போக்குவரத்தில் இடையூறு
கடும் பனிமூட்டம் காரணமாக ராசிபுரம் ரயில் நிலையத்தில் சிக்னல் தெரியாததால் ராசிபுரம் வழியாக சரக்கு ரயில்கள் நிறுத்தப்பட்டன.
பனிமூட்டத்தில் முகப்பு விளக்குகள் எரிந்தன
சாலையில், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.
நடைப்பயிற்சி செய்வோர், மாணவர்கள், தொழிலாளர்களின் செல்பிகள்
அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் பனி மூட்டத்தை ரசித்து செல்பி எடுத்தும் வீடியோக்கள் எடுத்தும் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu