காவிரி-திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: பார்லி.யில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் பேச்ச

நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்.
காவிரி-திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பார்லி.யில், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் பேசினார்.
பார்லிமெண்டில், ஜனாபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் பேசியதாவது:
பீகார் மாநிலத்திற்கு அபரிமிதமான நிதியும் தமிழகத்திற்கு திருக்குறளையும் கொடுத்த நிதி அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். நாடு கடந்த 10 ஆண்டுகளில் முன்னேறிவிட்டது என்று உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2014 இல் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் ரூ. 60, இன்றைக்கு ரூ. 87, இதுதான் வளர்ச்சியா. ஜவுளி தொழிலுக்கு கொடுத்து வந்த அனைத்து ஊக்க உதவிகளும் நிறுத்தப்பட்டதால், தற்போது ஆடை ஏற்றுமதியில் நம்மைவிட பங்களாதேஷ் முன்னிலையில் உள்ள. எனவே ஜவுளித் தொழிலை மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும். கோவை, மதுரை நகரங்களில் விரைவில் மெட்ரோ ரயில் வசதி அமைக்க வேண்டும். நதி நீர் இணைப்பு குறித்த பிரதமர் பேசுகிறார். ஆனால், 2014ல் அவர் கூறிய கங்கை - காவிரி இணைப்பு, 2019ல் கூறிய காவிரி- குண்டாறு இணைப்பு எப்போது நடைபெறும். புதிய விமானங்கள் நிறைய வாங்கப்படும் என்று உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் விமான பயண கட்டணம் ஏழை மக்கள் பயணம் செய்ய முடியாத விதத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டணம் வசூலிக்கின்னறர். எனவே விமான கட்டணம் நிர்ணயத்தில் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும். சேலம் விமான நிலையத்தை உடனடியாக விரிவாக்கம் செய்து நாட்டின் முக்கிய விமான நிலையங்களுடன் இணைக்கும் வகையில் விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்ககிரி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இந்தியா முழுவதும் நெடுங்சாலைகில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். வாகன இன்சூரன்ஸ் பிரிமிதயத்திற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் லாரிகளுக்கு தகுதிச்சான்று (எப்சி) பெறலாம் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு அண்டை மாவட்டங்களான திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனம் வசதி பெறும் வகையில் காவேரி-திருமணி முத்தாறு திட்டத்தை நிறைவேற்றவேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முட்டை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு தேவையான அனைத்து பாக்டீரியா மற்றும் வைராலஜிக்கல் பரிசோதனையை மேற்கொள்ள, நாமக்கல்லில் மத்திய அரசின் சார்பில், புதிய ஆராய்ச்சி மையம் அமைக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu