அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..!

அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா.

அரசு பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

அரசு பள்ளிகள், அலுவலகங்களில் அருவருக்கத்தக்க செயல்களிப் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

நாமக்கல் :

அரசு பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள சமையலறையின் கதவு மற்றும் பூட்டிலும், அருகில் உள்ள சுவற்றில் அசிங்கமான வார்த்தைகளை எழுதியும், ஆபாசமான படங்களை வரைந்து அருவருக்கதக்க செயல்களை செய்துள்ளதைப் பார்த்து பள்ளியின் தலைமையாசிரியர் எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். எருமப்பட்டி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் துரைமுருகன் (25) என்பவர், முன்விரோதம் காரணமாக பள்ளியின் காம்பவுன்ட் சுவற்றை எறி குதித்து பள்ளியின் உள்ளே சென்று, பள்ளியின் சமையலறை கதவு மற்றும் பூட்டில் அருவருக்கதக்க செயல்களை செய்தும், அருகில் கிடந்த சிகப்பு கலர் கிரயான் பென்சிலை எடுத்து அருகில் உள்ள சுவற்றில் ஆபாசமான வார்த்தைகளை எழுதியும், படத்தையும் வரைந்துள்ளது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், துரைமுருகனை போலீசார் கைது செய்து கோர்ட் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற அருவருக்கதக்க செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது, கிரிமினல் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story