நாமக்கல்லில் நாளை 5 இடங்களில் பேரிடர் மேலாண்மை ஒத்த்திகை, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் : கலெக்டர் வேண்டுகோள்

உமா, நாமக்கல் மாவட்ட கலெக்டர்.
நாமக்கல்,
இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பருவமழை காலங்களில் பல த்தமழை காரணமாக ஆற்றில் அதிக நீர்வரத்து இருக்கும்போது பொதுமக்களின் உயிர், உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கைநடவடிக்கை, மீட்பு நடவடிக்கை போன்றவற்றை மேற்கொள்வது தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தில் நாளை 15ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை மணிவரை 5 இடங்களில் சப் கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து பேரிடம் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது
குமாரபாளையம் தாலுகா பவானி பழைய பாலம், பள்ளிபாளையம் ஆவாராங்காடு ஜனதா நகர், திருச்செங்கேடு தாலுகா பட்லூர், ப.வேலூர் தாலுகா கொத்தமங்கலம், மோகனூர் தாலுகா ஒருவந்தூர் ஆகிய இடங்களில் இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, நீர்வளத்துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, சுகாதாரத் துறை, நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், போக்குவரத்துத் துறை மற்றும் அந்தந்த கிராமத்திற்கான முதல்நிலை தகவல் அளிப்பவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சி பேரிடர் காலங்களுக்கான முழுமையான ஒத்திகை பயிற்சியாக மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே, பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu