குமாரபாளையத்தில் காந்தி சிலை தூய்மைப் பணிகள் தீவிரம்

குமாரபாளையத்தில் காந்தி சிலை தூய்மைப் பணிகள் தீவிரம்
X

குமாரபாளையத்தில் காந்தியின் சிலை தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் காந்தியின் சிலை தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

இந்திய அரசின் 75வது சுதந்திரதின விழா ஆக. 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடெங்கும் ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி வைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் நகரில் உள்ள 33 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளில் தேசிய கொடி விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியின் திருவுருவச்சிலை தூய்மை செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய நாளில் தேசியக்கொடி ஏற்றுதல், சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களின் குடும்பத்தார்கள் கவுரவப்படுத்துதல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

Tags

Next Story