வேதாரண்யத்தில் துணை மின்நிலையம் அமைப்பு -அமைச்சர் ஆய்வு

வேதாரண்யத்தில் ரூபாய் 24 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரிசோதனை ஆய்வை துவக்கி வைத்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 33 கிலோ வாட் மின் நிலையம் இயங்கி வந்தது, இதனால் குறைந்த மின் அழுத்தமும், அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனை தற்போது 110 கிலோவாட்டாக தரம் உயர்த்தபட்டு பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளபட்டது.

இதனை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஒ.எஸ் மணியன் ஆய்வு செய்தனர். பின்பு பூஜைகள் செய்து பரிசோதனை செய்யபட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியார் பிரவின் பி நாயர் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் அவர்கள் திறந்து வைப்பார் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஒ.எஸ் மணியன் தெரிவித்தார்.

Tags

Next Story
ai tools for data analysis