மயிலாடுதுறையில் புதிய பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி துவக்கம்

மயிலாடுதுறையில் புதிய பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி துவக்கம்
X
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, குழாய் பதிக்கும் பணியை துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் பாதாளசாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதன்காரணமாக சாலைகளில் திடீர் பள்ளங்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வந்தது.

இதனால், போக்குவரத்து தடைபடுவதுடன், கழிவுநீர் வெளியேற்றம், துர்நாற்றம் ஆகிய பிரச்சினைகளால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தரங்கம்பாடி சாலையில் கடந்த மாதம் மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கி, கழிவுநீரேற்றம் தடைபட்டது. இதையடுத்து, சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தை நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் இம்மாத தொடக்கத்தில் ஆய்வு செய்து, இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் பாதிப்பை நிரந்தர சரிசெய்யும் விதமாக 2.19 கி.மீட்டர் தொலைவுக்கு புதிய நீரேற்றுக் குழாய்கள் அமைக்க ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அத்திட்டத்திற்கான தொடக்கப்பணி இன்று நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, குழாய் பதிக்கும் பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் விஜிகே.செந்தில்நாதன், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சுப்பையா, நகராட்சி பொறியாளர் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்மூலம், நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தில் இனிமேல் தீர்வு ஏற்படும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!