இலவச மிதிவண்டிகளுக்கு உதிரி பாகங்களை பொருத்தும் பணி !

இலவச மிதிவண்டிகளுக்கு உதிரி பாகங்களை பொருத்தும் பணி !
X

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச மிதிவண்டிகளுக்கு உதிரி பாகங்களை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசால் 11வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில், குத்தாலம், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் 49 பள்ளிகளை சேர்ந்த 4,031 மாணவிகளுக்கும், 2,845 மாணவர்களுக்கும் 6,876 மிதிவண்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவாண் நிறுவனத்திடமிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டிகள் வழங்குவதற்காக உதிரி பாகங்கள் பொருத்தும் பணி இரவு பகலாக மயிலாடுதுறையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மிதிவண்டிகள் வழங்க அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளி கல்விதுறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!