தடையை மீறி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தடையை மீறி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X
கரோனா அச்சுறுத்தல் மறந்தனர்- தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் குவிந்தனர் .

வழக்கமாக புத்தாண்டில் டிசம்பர் 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய தினங்களில் புகழ்பெற்ற தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் புத்தாண்டை கொண்டாட கூடுவர். இந்தாண்டு கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரைகளிலும், சாலைகளிலும் மக்கள் கூட்டம் கூட மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குடும்பத்தினரோடு குவிந்தனர்.

இந்த ஆண்டு கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடற்கரை பகுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இதனால் டிச 31 மற்றும் ஜன 1 ஆகிய 2 நாட்கள் கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்தினரோடு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொறையார் காவல்நிலைய காவலர்கள் மற்றம் கடலோரகாவல்நிலைய காவலர்கள் எச்சரிக்கை செய்தும் தடையை மீறி பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தது சமூக ஆர்வலர்களின் அதிருப்தியை பெற்றுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!