மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் அறக்கட்டளை மூலம்உணவு வழங்கல்

மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பின் சார்பில் அரசு மருத்துவமனையில் நடைபெர்ற 200 வது நாள் உணவு வழங்கும் விழா
மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு தொடங்கி தொடர்ச்சியாக மதுரையில், சாலையோரத்தில் வசித்து வரும் வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 200 நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது .
200 -ஆவது நாள் உணவு வழங்கும் நிகழ்வு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்றது. மதுரையின் அட்சயபாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.மதுரை மேற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ராஜி தனசேகரன், தாம்ப்ராஸ் மாநில துணைத்தலைவர் சமூக ஆர்வலர் இல. .அமுதன், மதுரை வடமேற்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் அழகப்பன், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ,மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல், மருத்துவமனை வெளிநோயாளிகள் பார்வையாளர் பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவினை வழங்கி பேசும்போது, மதுரையின் அட்சயபாத்திரம் தொடர்ந்து வறியவர்களுக்கும், மன நோயாளி களுக்கும் உணவினை வழங்கி வருவது பாராட்டுக்குரியது .உலகத்தில் சேவை ஒன்று தான் சிறப்பானது. ஒவ்வொரு வரும் ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களுக்கு உதவி புரிய வேண்டும். வாழ்க்கையில், பிறருக்கு உதவுவதில் தான் மகிழ்ச்சியே இருக்கிறது.
பொதுமக்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளை அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் நம் உடல் நலத்தை நன்கு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றார் அவர். ஏற்பாடுகளை மதுரையின் அட்சய பாத்திரம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu