மதுரை: குப்பை லாரியில் சடலமாக கிடந்த குழந்தை

மதுரை: குப்பை லாரியில் சடலமாக கிடந்த குழந்தை
X

மதுரை வெள்ளைக்கல் குப்பைக்கிடங்கிற்கு குப்பை ஏற்றி வந்த லாரியிலிருந்து 7 மாத ஆண் சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குப்பட்ட அவனியாபுரம் அருகே வெள்ளைக்கல் பகுதியில் மாநகராட்சிக்குட்பட்ட திறந்தவெளி குப்பை கிடங்கானது செயல்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சியில் சேரும் அனைத்து குப்பைகளும் இங்கு கொட்டப்படும் நிலையில், ஒரு நாளைக்கு 70 லாரிகள் வீதம் 200 முறைகளுக்கு மேலாக வந்து குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இந்நிலையில், குப்பைகளை கொட்ட வந்த லாரிகளில் ஒன்றில், குப்பைகளுக்கிடையே 7 மாத ஆண் சிசு ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று குழந்தையின் உடலானது போலீசாரால் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!