மொபட்- கார் மோதி விபத்து, தம்பதி பலி

மொபட்- கார் மோதி விபத்து, தம்பதி பலி
X

கரூரில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் வயதான தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (65) விவசாயி. இவர் தனது மனைவி மீனாட்சியுடன் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள ஆவாரங்காட்டுபுதூரில் தனது மகள் வசந்தி வீட்டுக்கு மொபட் மூலம் சென்று கொண்டிருந்தனர். வேலாயுதம்பாளையம் ஆவாரங்காட்டுப்புதூர் பிரிவில் திரும்ப முயன்ற போது, பின்னால் பெங்களூரிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சுதர்சன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி