மின்சாரம் பாய்ந்து இளைஞர் படுகாயம் உறவினர்கள் மறியல்

மின்சாரம் பாய்ந்து இளைஞர் படுகாயம் உறவினர்கள் மறியல்
X

கரூரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடும் தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்யாத நிறுவன உரிமையாளரை கண்டித்து உறவினர்கள் கரூர் கோவை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் அருகே உள்ள பள்ளாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. இவர் சுக்காலியூர் பகுதியில் உள்ள கான்கிரீட் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். கடந்த 6ஆம் தேதி பணியில் இருந்த போது மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த கோபி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.கோபியின் சிகிச்சைக்கு அவர் வேலை பார்த்த ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவன உரிமையாளர் எந்தவித உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கோபியின் உறவினர்கள், நண்பர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரூர் அருகில் திருக்காம்புலியூர் என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கரூர் கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு கரூர் டிஎஸ்பி., முகேஷ் ஜெயக்குமார் நேரில் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி கான்கிரீட் நிறுவன உரிமையாளரிடமிருந்து கோபியின் சிகிச்சைக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!