முதியவர் எரித்து கொலை - 5 சிறுவர்கள் கைது

முதியவர் எரித்து கொலை - 5 சிறுவர்கள் கைது
X

நாகர்கோவிலில் முதியவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (60). கூலித் தொழிலாளி.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் பிரச்சனை ஏற்பட்டு வீட்டிலிருந்து வெளியேறிய இவர், பத்தாண்டுகளாக வீட்டிற்கு செல்வதில்லையாம்.இருளப்பபுரம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் தங்கிவிட்டு பகலில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று அதிகாலையில் சந்திரனின் உடலை பாதி தீப்பிடித்து எரிந்த நிலையில் போலீசார் கைப்பற்றினர்.

இதனிடையே சம்பவம் நடைபெற்ற பகுதியின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் போலீசாரின் விசாரணையில், இருளப்பபுரம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் மதுரையை சேர்ந்த 5 சிறுவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.அவர்களில் ஒரு சிறுவனின் காதலி செல்போனில் பேசாததால் விரக்தியில் இருந்ததாகவும் சம்பவத்திற்கு முன்தினம் இரவு மது அருந்திய 5 பேரும் மது போதை தலைக்கேறிய நிலையில், வழி நெடுகிலும் பல்வேறு கார்கள் மீதும் கல்லெறிந்த வண்ணம் வந்துள்ளனர்.

இந்நிலையில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்த சந்திரனை எழுப்பி அவரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். அப்போது அவர் தீப்பெட்டி இல்லை லைட்டர் தான் இருக்கு என்று கூறி, லைட்டரை கொடுத்துள்ளார்.லைட்டரை வாங்கிய சிறுவர்கள் அவரது வேட்டியில் தீ பற்ற வைத்துள்ளனர். இதில் சந்திரனின் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில், சிறுவர்கள் அங்கிருந்து எந்த அச்ச உணர்வும் இல்லாமல் சென்றுள்ளனர்.இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சிறுவர்களை பொறி வைத்து பிடித்த போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture