சொகுசு கார் மோதி முதியவர் பலி,பெண் படுகாயம்

நாகர்கோவிலில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் பெண் படுகாயம் அடைந்தார். முதியவர் உயிரிழந்தார்.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் பேலஸ் ரோடு பகுதி எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பகுதியாக உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த சுவரில் உரசி சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த முதியவர் மீது மோதியதோடு இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீதும் பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம் அடைந்தார்.
உயிர் இழந்த முதியவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து வழக்குப் பதிவு செய்த நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உயிரிழந்த முதியவர் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu