காசி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

காசி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
X

பல பெண்களை மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காசி மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பள்ளி சிறுமிகள் முதல் திருமணம் ஆன பெண்கள் வரையிலும் சமூக வலைத்தளம் மூலம் காதல் வலை விரித்து அவர்களுடன் தனிமையில் இருக்கும் போது அவர்களுக்கே தெரியாமல் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதோடு பெண்களை மிரட்டி பணம் மற்றும் நகை பறித்தலில் ஈடுபட்ட நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் வழக்கு பதியப்பட்டது.

தொடர்ந்து அடுத்தடுத்து பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் கந்துவட்டி, குண்டர் சட்டம் உட்பட 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் காசி வழக்கில் சிபிசிஐடி போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.ஏற்கனவே காசி மீதான வழக்குகளில் கந்துவட்டி வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மேலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project