தேர்தலில் திமுகவிற்கு தோல்வி மட்டுமே எல்.முருகன்

தேர்தலில் திமுகவிற்கு தோல்வி மட்டுமே எல்.முருகன்
X

சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு கிடைப்பது தோல்வி மட்டும் தான் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் வந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, வரும் 14 ஆம் தேதி சென்னை மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொள்கிறார். மதுரையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது. மேலும் மாவட்ட தலைவர் மஹா சுசீந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் சில விஷமிகள், பயங்கரவாதிகள், தேச விரோதிகள் உள்ளனர். திட்டமிட்டு கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்.

பெண்கள் பாதுகாப்பு சமத்துவம் குறித்து திமுக பேசுகிறது. இந்த பேச்சு பேச்சோடு தான் உள்ளது. திமுக வை சேர்ந்த பூங்கோதைக்கு அக்கட்சியிலேயே பாதுகாப்பு இல்லை. கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து கேள்வி கேட்ட பெண் ஆபாச வார்த்தைகளால் திட்டப்பட்டு தாக்கப்பட்டார், இப்படி இருக்கும் திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நல்லது நடக்காது. தமிழக மக்கள் திமுகவை புறக்கணித்து விட்டனர்.சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு கிடைப்பது தோல்வி தோல்வி தோல்வி மட்டும் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!