ரேஷன் அரிசி கடத்தல் லாரி கவிழ்ந்து விபத்து 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல் லாரி கவிழ்ந்து விபத்து   10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அரிசி கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த கேரளா பதிவு எண் கொண்ட லாரியை தடுத்து நிறுத்த முயன்றபோது லாரி நிற்காமல் வேகமாக சென்றது. மேலும் அந்த லாரி பூதப்பாண்டி அடுத்த அழகியபாண்டிபுரம் பகுதியில் செல்லும் போது சாலை வளைவில் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ரேஷன் அரிசியை கடத்தி சென்றவர்கள் தப்பியோடிய நிலையில் அங்கு வந்த அதிகாரிகள் லாரியில் இருந்த 10 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பூதப்பாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story
the future of ai in healthcare