விவசாய நலன் காக்கும் கூட்டத்தில் ரூ. 7.59 லட்ச மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்.
Protect The Welfare Of Farmers Meet
விவசாயிகள் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் 14 நபர்களுக்கு 7.5 லட்சம் மதிப்பில் கூட்டுறவுத் துறை சார்பில் நல திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்.
மாதந்தோறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 11 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை நடைபெறுவது வழக்கம்.
Protect The Welfare Of Farmers Meet
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் விவசாயிக்கு பயிர் கடன் வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி , உடன் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்று தங்களது விவசாயம் மற்றும் அதனை சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் கோரிக்கை மனுக்கள் ஆகும் நேரில் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காண்பர்.அவ்வகையில் இன்று ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நல திட்டங்கள் மற்றும் அதனை சார்ந்த பெற துறைகள் குறித்து விளக்கவுரை அலுவலர்களால் அளிக்கப்பட்டது.
Protect The Welfare Of Farmers Meet
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்
குறிப்பாக பயிர் காப்பீட்டு திட்டம் கூட்டுறவு துறை சார்பில் விவசாயம் மற்றும் கால்நடை கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை எடுத்துரைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில் விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் கூட்டுறவுத் துறை சார்பில் 14 நபர்களுக்கு ரூபாய் 7.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினர்.
இதனை தொடர்ந்து விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கான பதில் நேரத்தை தவிர்த்து , அந்நேரத்தில் விவாதங்களை மேற்கொள்ளலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் , கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ஜெய்ஸ்ரீ, வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu