காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
X

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில்  மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான கராத்தே தற்காப்பு பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பயிற்சியின் பொழுது கல்லூரி மாணவிகள் தலையில் ஓடு உடைத்தும், செங்கல் உடைத்தும் பயிற்சியில் மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பெண்களின் பாதுகாப்புக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் கோமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் இஷின்ரியூ கராத்தே பயிற்சி பள்ளி பயிற்சியாளர் நூர் முகமது மற்றும் அவரது குழுவினர் தற்காப்பு கலைகள் குறித்து விளக்கி, செயல்விளக்கம் அளித்தனர்.


இதில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பொது இடங்கள், பஸ்களில் செல்லும்போது பாதுகாப்புடன் எப்படி செல்வது, பாலியல் சீண்டல், தொல்லைகள் ஏற்பட்டால் எப்படி சமாளித்து தற்காத்து கொள்வது எனவும், பெண்களுக்கான தற்காப்பு கராத்தே பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் பச்சையப்பன் மகளிர் கல்லூரி மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தற்காப்பு கலைகள் குறித்து அறிந்ததுடன், செய்முறைப் பயிற்சியிலும் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவிகள் பயிற்சியின் பொழுது உடம்பு பகுதி மற்றும் தலைப்பகுதிகளில் சீமை ஓடுகளை உடைத்தும், செங்கல் உடைத்து காட்டியும் செயல் முறை பயிற்சியில் ஈடுபட்டு அசத்தினர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!