காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களைத் தேடி.. உங்கள் ஊரில்திட்டம்:ஆட்சியர் ஆய்வு
இருதய சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவரிடம் ஆட்சியர் கேட்டறிந்த போது
Kanchipuram Collector Inspection
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் நியமிக்க பரிந்துரை செய்யப்படும் எனவும், தற்காலிகமாக வெளி ஆட்களை கொண்டு பணியிடங்கள் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வுக்கு பின் தகவல்...
தமிழகம் முழுவதும் இன்று முதல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் திட்டம் துவங்கப்படுகிறது.இதில் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு குறுவட்டம் தேர்வு செய்யப்பட்டு 24 மணி நேரம் அங்கு தங்கியிருந்து செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் குறைகள், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் தலைமையிலான அனைத்து துறை அலுவலர்களும் ஆய்வு செய்வர்.
Kanchipuram Collector Inspection
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனயில் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணி பெண்களிடம் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர் கலைச்செல்வி.
அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கோவிந்தவாடி அகரம் குறுவட்டம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டது.இதில் முதல் நிகழ்வாக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் கலைச்செல்வி பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார்.சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் முறைகள், மருந்து இருப்பு மற்றும் வழங்கல் , சுகாதாரப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளிடம் பேசுகையில் , அரசு மருத்துவமனை முழுவதும் ஆய்வு செய்ததில் போதிய மருந்துகள் இருப்புகள் உள்ளதாகவும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்ததன் பேரில் திட்டத்தின் கீழ் அவை அனைத்தும் பரிந்துரை செய்யப்படும் எனவும், தற்காலிகமாக வெளி ஆட்கள் கொண்டு இப்ப பணியிடங்களை நிரப்பி உரிய அனைத்து சேவைகளும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் இந்த திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu