காஞ்சிபுரத்தில் அழகுமுத்துக்கோன் 267வது குரு பூஜை விழா கோலாகலம்

காஞ்சிபுரத்தில் அழகுமுத்துக்கோன் 267வது குரு பூஜை விழா கோலாகலம்

காஞ்சிபுரம் ராஜ வீதியில் கோகுல சத்திரம் பகுதியில் அமைக்கப்பட்ட அழகு முத்துக்கோன் சிலைக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற போது

காஞ்சிபுரம் மாவட்ட யாதவ சபை சார்பில் பெண்கள் பால்குடம் ஏந்தி காஞ்சிபுரம் ராஜ வீதியில் வலம் வந்து அழகுமுத்துகோன் சிலைக்கு பாலபிஷேகம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் 267வது குரு பூஜை விழா கோலாகலம் நடைபெற்றது. இதில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,பொய்க்கால் குதிரை போன்ற கிராமிய கலைக்குழுவினர் மற்றும் பேண்ட் வாத்தியம், தாரை தப்பட்டை குழுவினருடன் ஆயிரத்திதிற்கும் மேற்பட்ட யாதவ மகாசபையினர் மற்றும் பால்குடங்களுடன் பெண்கள் பேரணியாக சென்று பூக்கடைச்சத்திரம் பகுதியிலுள்ள அழகு முத்து கோனின் திருவுருவ சிலைக்கும் பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.

அரசு விழாவாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர், மாவீரன் அழகு முத்துகோனின் 267-வது குருபூஜை விழா இன்று தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் பகுதியிலுள்ள கோகுல சத்திரம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துகோனின் திருவுருவ படத்திற்கும், திருவுருவ சிலைக்கும் யாதவ மகாசபையினர் மற்றும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, பாமக உள்ளிட்ட அனைத்துக்கட்சியை சார்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துக்கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இதனைதொடர்ந்து காஞ்சிபுரம் யாதவ மகாசபையைச் சேர்ந்த சுமார் ஆயிரத்த்திற்கும் மேற்பட்டோர் மயிலாட்டம், ஒயிலாட்டம்,கரகாட்டம்,பொய்க்கால் குதிரை போன்ற கிராமிய கலைக்குழுவினர், பேண்ட் வாத்திக் குழுவினர், தாரை தப்பட்டை குழுவினருடன் பேரணியாக புறப்பட்டு கச்சபேஸ்வரர் கோவில், சங்கரமடம், பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட் வழியாக நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பூக்கடைச்சத்திரம் பகுதியிலுள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துகோனின் திருவுருவ சிலை பாலாபிஷேகம் செய்துகுரு பூஜை விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

மேலும் இந்நிகழ்வின் போது பொது மக்களுக்கும்,ஏழை எளியவர்களுக்கும் இனிப்புகளும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது.இந்த 267வது குரு பூஜை விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காஞ்சிபுரம் யாதவ மகா சபை,யாதவ சத்திர பரிபாலன சபை,மாவீரன் அழகு முத்துகோன் பேரவையினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story