உத்திரமேரூர் அருகே பள்ளியில் தீபாவளி பட்டாசு வெடித்ததால் தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்ட ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி..
இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்று பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை உறவினர்களுக்கு அளித்தும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் உண்டு மகிழ்ந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் , அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் தொழில்நுட்ப அலுவலகங்கள் என அனைத்திலும் பணிபுரியும் நபர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் காஞ்சிபுரம் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.
பொதுமக்கள் தீபாவளி முடிந்த நிலையிலும் பட்டாசுகளை வெடித்து வருகின்றனர் குறிப்பாக சிறுவர்கள் தங்களது மகிழ்ச்சிக்காக பெற்றோரிடம் கேட்டு பட்டாசுகள் வாங்கி தொடர்ந்து வெடித்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சின்ன நாரசம்பேட்டை தெருவில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இங்கு மாலை நான்கு மணி அளவில் திடீரென வகுப்பறையில் இருந்து புகை வருவதாக அருகில் இருந்தவர்கள் அளித்த புகாரில் உடனடியாக தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
உடனடியாக தீயை அணைத்த நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது, அப்பகுதியில் சிலர் பட்டாசுகள் வெடித்ததும், அதில் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்றும் இது மட்டுமில்லாமல் வகுப்பறையில் மின் சாதனங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த அறையில் பழைய ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது இவை அனைத்தும் முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டது.
இது குறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu