30 நாட்கள் வேலிடிட்டி தரும் ஜியோவின் 5 ப்ரீபெய்ட் திட்டங்கள்.
ஜியோ நிறுவனம் சமீபத்தில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. அதாவது கடந்த ஜனவரி மாதம் அதிக பயனர்களை இழந்துள்ளது ஜியோ நிறுவனம். அதேசமயம் ஏர்டெல் நிறுவனம் மட்டுமே புதிய சந்தாதாரர்களை இணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே வாடிக்கையாளர்களை ஈர்க்க ஜியோ நிறுவனம் இனிமேல் பல புதிய முயற்சிகளை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது30 நாட்கள் வேலிடிட்டி தரும் ஜியோ நிறுவனத்தின் 5 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜியோ ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும்.
இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்றவற்றிக்கான அணுகலை வழங்கியுள்ளது இந்த திட்டம்.
ஜியோ ரூ.181 திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.181 திட்டம் ஆனது 30ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டம் அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தா ஆகியவற்றை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.241 திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.241 திட்டம் ஆனது 40ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தா ஆகியவற்றை வழங்காது.
ஜியோ ரூ.301 திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.301 திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும் ஆனால் இந்த திட்டம் அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான பாராட்டு சந்தா ஆகியவற்றை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.259 திட்டம்
பயனர்களின் நலன் கருதி புதிய ரூ.259 ப்ரீபெய்டு திட்டத்தை ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த அட்டகாசமான திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளையும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.259 திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் நான்கு ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவுடன் வருகிறது இந்த 259 ரூபாய் திட்டம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu