நீட் (NEET) தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

நீட் (NEET) தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
X
நீட் (NEET) தேர்வுக்கு புதியதாக தேர்வெழுதும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்துகொள்வோம்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) எழுத விண்ணப்பிப்பது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.

நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையின் (NTA) இணையதளமான https://neet.nta.nic.in/ என்ற முகவரியில் சென்று 'NewRegistration' கிளிக் செய்ய வேண்டும். ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் அருகில் உள்ளவற்றில் விண்ணப்பத்தின் எண் மற்றும் கடவு சொல்லை பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்.


பின்னர் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணம், விண்ணப்ப நடைமுறை, கடவுச் சொல் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.


அதில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை புரிந்துகொண்டேன் என ஒப்புதல் ( டிக் செய்து விட்டு) அளித்து கீழே உள்ள Proceed கிளிக் செய்து அடுத்த பகுதியான விண்ணப்பப்படிவத்தில் உள்ள அடிப்படை தனிப்பட்ட விவரங்கள், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்,DOB, தனிப்பட்ட விவரங்கள், கல்விப் பதிவுகள், முகவரி, தேர்வு மையம் போன்ற விவரங்களுடன் நிரப்பவும்.








விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் புகைப்படம், கையொப்பம், இடது கட்டைவிரல் பதிவு, 10 வது மதிப்பெண் பட்டியல் போன்ற சில தேவையான ஆவணங்களை பதிவேற்றுமாறு கேட்கப்படுவார்கள்.

தேவையான அனைத்து விவரங்களையும் பதிவேற்றிய பிறகு, NEET 2022 க்கான பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தைச் சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்கப்படுவார்கள்.

எந்த முறையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து பரிவர்த்தனையை முடிக்கவும்.

பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்ததும், நிரப்பப்பட்ட உறுதிப்படுத்தல், கட்டண ரசீதையும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05 2022

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.05.2022

விண்ணப்ப திருத்தம்: மே 2022

அட்மிட் கார்டு: ஜூன் 2022

தேர்வு தேதி: 17.06. 2022

தேர்வு குறித்த மேலும் விபரங்களுக்கு: Click Here

Tags

Next Story