பவானிசாகர் அணையின் இன்றைய (செப்.4) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (செப்.4) நீர்மட்ட நிலவரம்
X

Erode News- பவானிசாகர் அணை.

Erode News,Bhavanisagar Dam Water Level: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (4ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 96.39 அடியாக உள்ளது.

Erode News, Erode News Today- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (4ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 96.39 அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது. நீலகிரி மலைப்பகுதி இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது.

நேற்று (3ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,094 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (4ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,289 கன அடியாக சரிந்தது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 96.53 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 96.39 அடியாக குறைந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 25.99 டிஎம்சியாக குறைந்தது.

மேலும், அணையில் இருந்து பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 750 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 3,150 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story