மதுபானக் கடையில் கொள்ளையடித்த இருவர் கைது

மதுபானக் கடையில் கொள்ளையடித்த இருவர் கைது
X
அரசு மதுபானக்கடையில் கடந்த மாதம் 14ம் தேதி மர்ம நபர்கள் உள்ளே புகுந்து காவலர்களை கட்டி வைத்து சரக்கு பாட்டில்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியன கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

ஈரோடு மாவட்டம் பாசூரில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையில் கடந்த மாதம் 14ம் தேதி மர்ம நபர்கள் உள்ளே புகுந்து காவலர்களை கட்டி வைத்து சரக்கு பாட்டில்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியன கொள்ளையடித்து தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து மலையம்பாளையம் காவல்நிலையிலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த மலையம்பாளையம் காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில்

கொள்ளையடித்த வழக்கில் ஈரோடு மாவட்டம் சிவகிரி குட்டப்பாளையத்தை சேர்ந்த தருண்ராஜ் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் சொந்தமாக ஓட்டி வரும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த மலையம்பாளையம் காவல்துறையினர் வேறு ஏதானும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கெண்டு வருகின்றனர்.

Tags

Next Story