தனியார் கட்டுமான நிறுவனத்தில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை - கணக்கில் வராத 20 கோடி ரூபாய் பறிமுதல்
ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீபதி அசோசியேட் பிரைவேட் லிமிட்டெட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக பேருந்து, திருமணமண்டபம், மசாலா தயாரிப்பு என பல்வேறு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரசின் பல்வேறு கட்டுமான ஒப்பந்தங்களை இந்நிறுவனம் பெற்று செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு, கோவை, மதுரை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், தனியார் நிறுவனத்திற்கு சொந்தான அலுவலகங்கள், பங்குதாரர்களின் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இரண்டாம் நாள் சோதனையின் போது கணக்கில் வராத 16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாம் நாளான இன்று மேலும் கணக்கில் வராத நான்கு கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் ஒப்பந்தமான கட்டுமான தொழில் செய்ததில் கணக்கில் வராத முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சோதனை மேலும் நீடிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu