அந்தியூர் அருகே வனப்பகுதியில் யானை உயிரிழப்பு

அந்தியூர் அருகே வனப்பகுதியில் யானை உயிரிழப்பு
X

அந்தியூரை அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வயது முதிர்ச்சி காரணமாக 60வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சென்னம்பட்டி வனச்சரகத்தில் மேற்குப் பீட் வனப் பகுதிகளில் இன்று வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியை மேற்கொண்ட போது கோவிலூர் புதுக்காடு வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்ட பணியாளர்கள் சென்னம்பட்டி வனச்சரக அலுவலர் செங்கோட்டையனுக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் அங்கு சென்ற வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவின் உதவியுடன் சம்பவ இடத்திலேயே யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர்.

இதில் உயிரிழந்த யானை சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும் வயது முதிர்ச்சி காரணமாக சரிவர உணவு உட்கொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். 2 மீட்டர் நீளம் கொண்ட யானையின் தந்தத்தை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!