கோவையில் ரூ. 20 கோடியில் அமைக்கப்பட்ட நவீன அறிவியல் மையம் பிப். 28 இல் திறப்பு

கோவையில் ரூ. 20 கோடியில் அமைக்கப்பட்ட நவீன அறிவியல் மையம் பிப். 28 இல் திறப்பு
X

கோவையில் அமைக்கப்பட்டுள்ள நவீன அறிவியல் மையம்.

கோவையில் ரூ. 20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன அறிவியல் மையத்தை தமிழக நிதியமைச்சர் பிப்ரவரி 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

கோவை அவிநாசி சாலையில் ஜிடி நாயுடு கல்லூரி வளாகம் அமைந்துள்ளது. அங்குள்ள எக்ஸ்பிரிமெண்டா அறிவியல் மையத்தில் ரூ. 20 கோடி மதிப்பில் நவீன அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, ஜி.டி. நாயுடு மகன் ஜி.டி. கோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவையில் கடந்த 1950ஆம் ஆண்டு ஜிடி நாயுடு அறக்கட்டளையை மறைந்த ஜி.டி நாயுடு துவங்கினார். அந்த அறக்கட்டளையின் கீழ் ஜி.டி. அறிவியல் அருங்காட்சியகம், ஜி டி கார் மியூசியம் போன்றவை செயல் பட்டு வருகின்றன.

பொதுமக்களும் மாணவர்களும் பல ஆண்டுகளாக இந்த அருங்காட்சியகங்களை பார்வையிட்டு பயனடைந்தது வருகின்றனர். ஜி.டி. நாயுடு அறக்கட்டளை தற்போது "எக்ஸ்பிரிமெண்டா" என்ற புதிய கலந்தாய்வு அறிவியல் மையத்தை ஏற்படுத்தி உள்ளது.


இந்த மையத்தின் நோக்கம், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இடையே அறிவியல் ஆர்வத்தை உருவாக்கி அதனை பயிற்சியாகவும், பொழுதுபோக்காகவும், எளிமையாக கற்றுக்கொள்ள வைப்பது ஆகும். இந்த நவீன

அறிவியல் மையத்தை பிப்ரவரி 28 ஆம் தேதி தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் துவக்கி வைக்க உள்ளார்.

சென்னையில் உள்ள ஜெர்மன் தூதரக அதிகாரி மைக்கேலா குச்லேர், கௌரவ விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த நவீன அறிவியல் மையம் 40,000 சதுர அடியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. சர்வதேச தரத்திற்கு இணையான 120-க்கும் மேற்பட்ட கலந்தாய்வு அறிவியல் பரிசோதனைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தை எளிதாக அணுகி கற்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டு உள்ளது. 20 கோடி ரூபாய் மதிப்பில் ஜெர்மன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெறப்பட்ட எக்ஸ்பிரிமெண்ட்டா கலந்தாய்வு அறிவியல் பரிசோதனை அரங்குகள் இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன ஜி.டி. கோபால் தெரிவித்தார்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?