விவசாய சட்டத்தை கண்டித்து மறியல், 300 பேர் கைது

விவசாய சட்டத்தை கண்டித்து மறியல், 300 பேர் கைது
X

சென்னையில் இந்திய தொழில் சங்கம் சார்பில் விவசாய சட்டங்களை வாபஸ் பெற வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும் அதனை வாபஸ் பெற வேண்டியும் விவசாய போராட்டம் தொடர்ந்து 41 வது நாளாக நடைபெற்று வருகிறது. அந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய தொழில் சங்கம் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னை திருவொற்றியூர், ராயபுரம், ஆர்கே நகர் போன்ற பகுதிகளில் இந்திய தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!