சென்னையில் பொங்கல் தாெகுப்பு விநியோகம் தொடக்கம்

சென்னையில் பொங்கல் தாெகுப்பு விநியோகம் தொடக்கம்
X

வடசென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பினை 953 நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பொருட்களுடன் 2500ரூபாய் கூடிய தொகுப்பினை இன்று முதல் நியாய விலைக்கடைகளில் காலை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வடசென்னையில் ராயபுரம், ஆர்கே நகர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகையினை வழங்கி வருகின்றனர்.

பொங்கல் பரிசு தொகுப்பினை பெற பொதுமக்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு அதற்கான தேதிகளையும் குறிப்பிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி இன்று காலை முதல் டோக்கன் அளிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒவ்வொரு நியாய விலை கடைகளில் காலையில் 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் என்ற முறையில் முழு கரும்பு , அரிசி, முந்திரி போன்ற பொங்கலுக்கு தேவையான பொருட்கள் கூடிய தொகுப்பு மற்றும் 2500ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

வடசென்னை முழுவதும் 953 நியாய விலைக் கடைகள் மூலம் 10 லட்சத்து 96 ஆயிரத்து 819 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக காலை முதலே பொதுமக்கள் மாஸ்க் அணிந்து பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று செல்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!