தமிழக லோக்சபா தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவி போய்விடும் :முதல்வர் எச்சரிக்கை

தமிழக லோக்சபா தேர்தலில் தோற்றால்  அமைச்சர் பதவி போய்விடும் :முதல்வர் எச்சரிக்கை
X

தமிழக முதல்வர் ஸ்டாலின்  (கோப்பு படம்)

CM Announcement To Ministers லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பை நழுவ விடும் அமைச்சர்களின் பதவி பறிபோய்விடும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளதால் அமைச்சர்களிடையே பெருத்த கிலி ஏற்பட்டுள்ளது.

CM Announcement To Ministers

2024 இந்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் வெற்றியை நழுவ விடும் பட்சத்தில் அவர்களுடைய அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளது அமைச்சர்களிடையே பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவைக்கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்தது. அப்போது லோக்சபா தேர்தல் குறித்து அமைச்சர்களுடன் சிறப்பு ஆலோசனை நடந்தது. அமைச்சர்கள் அனைவரிடமும் தேர்தல் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் கூடவே எச்சரிக்கையும் விடுத்துள்ளது அவர்களுக்கு பெருத்த அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

CM Announcement To Ministers


கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது,

லோக்சபா தேர்தலுக்காக கட்சி சார்பில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில் தொகுதி வாரியாக நிர்வாகிகளுக்கான கூட்டத்தினையும் நடத்தி சொல்லியுள்ளேன்.

உங்களால் ஏதாவது தீர்க்க முடியாத பிரச்னைகள் இருக்கும் பட்சத்தில் அதனை குழுவின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அதற்கு தீர்வு காண வேண்டும். பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், மாவட்ட அமைச்சர்கள், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றிக்கான சாதக பாதக அம்சங்கள் குறித்து அந்த குழுவினரோடு ஆலோசித்து செயல்பட வேண்டும்.

இந்த தேர்தல் வெற்றியானது நமக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டியது மிக மிக முக்கியம்.

நாம் பங்கு வகிக்கும் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். அமைச்சர்களாக இருக்கும் உங்களின் மாவட்டத்துக்கும், பொறுப்பு மாவட்டத்துக்கும், நீங்கள் தான் வெற்றிக்கு முழு பொறுப்பு. உங்கள் தொகுதியில் வெற்றியை நழுவ விட்டால் அமைச்சர் பொறுப்பும் உங்களை விட்டு நழுவி விடும். எனவே இதனை மனதில் வைத்து ஒவ்வொருவரும் செயல்படுங்கள் எந்த நேரத்திலும் நீங்கள் இதனை மறந்து விடக்கூடாது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியின் வெற்றியும் நமக்கு மிகவும் முக்கியம். இந்த தொகுதியை எக்காரணம் கொண்டும் கூட்டணிக்கு கொடுக்ககூடாது .வேட்பாளராக வேறு யாரையாவது போடுங்க என கேட்டு என்னிடம் யாருமே வரக்கூடாது. வரவேண்டாம்.

அனைத்து தொகுதிகளிலுமே நானே வேட்பளராக களம் இறங்கி இருப்பதாக நினைத்து நீங்க தேர்தல் வேலை பாருங்கள். நம் அணியின் முழுமையான வெற்றி மிக மிக முக்கியம்.

நம்முடைய ஆட்சியின் சாதனைகளை நீங்கள் தொகுதிக்கு நேரடியாக சென்று முழுமையாக மக்களிடம் எடுத்து சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். திமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களால் மக்கள் நிறைய பயனடைந்துள்ளனர்.

அந்த வகையில் தமிழக வாக்காளர்கள் திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் அவர்களுடைய ஓட்டுகளைப் போடுவதற்கு தயார் நிலையில் உள்ளனர். அதனால் தேர்தல் பிரசாரம் வாக்குகேட்பது என்பது பெரும் சுமையாக இருக்க வாய்ப்பில்லை. எனவே நம் கட்சிக்காரர்களையும் நம்முடன் கூட்டணியில் உள்ளவர்களையும் ஒருங்கிணைத்து வெற்றியை நோக்கி செல்லவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

முதல்வரின் இந்த எச்சரிக்கை பேச்சையடுத்து அமைச்சர்கள் அனைவருக்கும் பெருத்த கிலி ஏற்பட்டுள்ளது. வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் எப்படி வெற்றி வாய்ப்பை பெறுவது என யோசனையில் இருந்தபடி இருந்தனர்.

Tags

Next Story
அமேசான்ல 5000 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி வாங்க முடியுமா? இப்பொவேய் போடுங்க ஆர்டர