மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
X

அரியலுாரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது

அரியலூர் மாவட்டத்தில் 75வது சுதந்திர தினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

ஒன்றிய செயலாளர் துரை.அருணன் தலைமையில், அரியலூரில் கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை கட்சியின் மாவட்டக்குழு துரைசாமி ஏற்றி வைத்தார். கட்சியின் ஒன்றியக்குழு கந்தன் கட்சி கொடி ஏற்றினார். அரசியலமைப்பு சட்ட முகப்புரையை மாவட்டக்குழு சந்தானம் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். மாவட்டக்குழு மலர்கொடி நன்றி கூறினார். சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்ட் பங்கு குறித்து கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசினார்.

இதில் மாவட்டக்குழு அருண்பாண்டியன், மற்றும் கட்சி கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story