அமேசானில் வெளியாகிறது கர்ணன்

அமேசானில் வெளியாகிறது கர்ணன்
X

கர்ணன் திரைப்பட போஸ்டர் 

கர்ணன் திரைப்படம் அமேசானில் வெளியாக உள்ளது.

மே 14ஆம் தேதி அமேசானில் வெளியாகிறது கர்ணன் திரைப்படம்.

இதுவரை வெளியான தனுஷ் திரைப்படங்களில் அதிக வசூல் என்கிற சாதனையை 'கர்ணன்' திரைப்படம் நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே. ஆனா மே 14ஆம் தேதி அமேசானில் வெளியாகிறது இது தெரியாத சேதி..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கர்ணன்'.

தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்தனர்.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பு வந்த உடன் வசூல் ரீதியாக எப்படியிருக்குமோ என்று படக்குழுவினருக்கு பயம் வந்தது ஆனாலும் பெரிய பாதிப்பின்றி 'கர்ணன்' திரைப்படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்று தந்தது. ஏற்கெனவே முதல் நாளில் ரூ.10 கோடி வசூலைப் பெற்று அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை இந்தப் படம் நிகழ்த்தியது.

இதற்கு முன் 'அசுரன்' தான் இதுவரை தமிழகத்தில் தனுஷ் படத்துக்குக் கிடைத்த அதிகபட்ச வசூல் என்கிற சாதனையைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 'கர்ணன்' வசூல் அசுரனை வீழ்த்தியுள்ளது.தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டபின், 'மாஸ்டர்', 'சுல்தான்', 'கர்ணன்' ஆகிய படங்கள் மட்டுமே பெரிய வெற்றி பெற்றுள்ளதாகத் திரையங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 100 சதவீத இருக்கைக்கு அனுமதி இருந்திருந்தால் 'கர்ணன்' இன்னும் பெரிய வசூலைப் பெற்றிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது நெட்ஃபிளிக்ஸின் பிரம்மாண்ட ஹாலிவுட் தயாரிப்பான 'தி க்ரே மேன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்', ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார் என்பதுகூடுதல் தகவல்.

எது எப்டியோ வரும் மே 14ஆம் தேதி அமேசானில் வெளியாகிறது கர்ணன் திரைப்படம் என்பது நம்ம செய்தி.

Tags

Next Story
ai marketing future