காயம் காரணமாக உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து பும்ரா விலகல் ஐசிசி அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா, அதிரடி வீரர் விராட்கோலி, உதவி கேப்டன் கேஎல்ராகுல்.
worldcup t20 dueto injury bhumra not participated
உலககோப்பை டி20போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் (பைல் படம்)
worldcup t20 dueto injury bhumra not participated
ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுடன்இந்திய அணியானது தலா 3 டி20 போட்டிகளில் விளையாடி தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் இதற்கு பிறகு நேரடியாக டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில்தான் இந்திய அணியானது விளையாட உள்ளது.உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது இம்மாதம் 16ந்தேதி முதல் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்திய அணியின் யார்க்கர் ஸ்பெஷலி்ஸ்ட் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் இடம்பெறவில்லை என ஐசிசியானது அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஆஸ்திரேலியாவில் 16ந்தேதி துவங்கும் இப்போட்டியானது அடுத்த மாதம் 13 ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. உலகமே எதிர்பார்த்திருக்கும் இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது எந்த அணி? என்பது குறித்து ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். என்னதான் அலசினாலும் திட்டமிட்டு அந்த நேரத்தில் விளையாடப்போகும்அணிதான் சாம்பியன் பட்டத்தினை வெல்வது உறுதி என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2007 ல் சாம்பியன்
இந்திய அணியானது கடந்த 2007 ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில்மகேந்திர சிங் தோனி தலைமையில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை வென்றது. அதற்கு பின் நடந்த போட்டிகளில் தோல்வியையே தழுவியது. தற்போது ரோகித்சர்மா தலைமையில் இந்திய அணி பங்கேற்க உள்ள நிலையில் சாம்பியன் பட்டத்தினை பெற இறுதிப்போட்டிக்குள் இந்திய அணி நுழையுமா? நம் வீரர்கள் இதற்காக திட்டமிட்டு நன்கு விளையாடுவார்களா? என்பதைப்பொறுத்துதான் இது இருக்கிறது.
உலகமே எதிர்பார்த்திருக்கும் இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களுடைய அணிகளில் விளையாடப்போகும் வீரர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது.இந்திய அணியானதுகேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இளம் வீரர்களுடன் களம் இறங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. பும்ரா முதுகில் காயம்காரணமாக அவர் பங்கேற்கவில்லை என ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. மேலும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணியானது முன்கூட்டியே கிளம்பி பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளது.பும்ரா விலகலை ஐசிசி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுவிட்டதால் அனைவருக்கும் ஏற்பட்ட சந்தேகம் நிவர்த்தியடைந்தது.
ஐசிசியின் பும்ரா விலகல் அறிவிப்பானது இந்திய அணி கிரி்க்கெட் ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்த செய்துள்ளது. இவரது விலகலானது இந்திய அணிக்கு பின்னடைவு என கருதப்படுகிறது. இருப்பினும் இவருக்கு பதிலாக தீபக்சாஹர் அல்லது முகமது சமி களமிறக்கப்படலாம் என கருதப்படுவதால் ரசிகர்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.
எது எப்படியோ? நன்கு விளையாடி இந்தியாவிற்கு பெருமை தேடும் வகையில் சாம்பியன் பட்டத்தினை இந்த அணியானது வென்றுவிட்டால் அது ஒரு சாதனையாக கருதப்படும்.அதாவது 15 வருடங்களுக்கு பிறகு இழந்த சாம்பியன் பட்டத்தினை இந்திய அணி ரோகித்சர்மா தலைமையில் பெற்றதாக கருதப்படும்... பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu