உலக தடகள சாம்பியன்ஷிப் 2022: பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அன்னு ராணிக்கு ஏழாவது இடம்

உலக தடகள சாம்பியன்ஷிப் 2022: பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அன்னு ராணிக்கு  ஏழாவது இடம்
X
World Athletics Championships- இந்தியாவின் தேசிய சாதனையாளரான அன்னு ராணி, மகளிர் ஈட்டி எறிதல்இறுதி போட்டியில் 61.12 மீட்டர் எறிந்து ஏழாவது இடத்தைப் பிடித்தார்,

World Athletics Championships- ஓரிகான் யூஜினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் மகளிர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தேசிய சாதனையாளரான அன்னு ராணி, தனது தனிப்பட்ட சிறந்த சாதனையான 63.82 மீட்டரை விட இரண்டு மீட்டர் குறைவாக வீசினார் .

ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர் 66.91 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார், காரா விங்கர் தனது இறுதி முயற்சியில் 64.05 மீட்டர் எறிந்து வெள்ளி வென்றார்,

அதே நேரத்தில் ஜப்பானின் ஹருகா கிடாகிச்சி 63.27 மீ. தூரம் வீசி உலக ஈட்டி எறிதல் போட்டியில் ஜப்பானின் முதல் பதக்கத்தை வென்றார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு