மகளிர் டி20 உலக கோப்பை - 6வது முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி!

மகளிர் டி20 உலக கோப்பை - 6வது முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி!
X
இந்த முறையும் ஆஸ்திரேலிய அணி வென்று 6வது முறை கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்த மகளிர் டி20 உலக கோப்பையைக் கைப்பற்றி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஆண்கள் அணி போல மிகப் பெரிய சாதனைகளை அடுத்தடுத்து நிகழ்த்தி வருகிறது இந்த பெண்கள் படை.

மகளிருக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதன் இறுதிப் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதின.

வலுவான இரு அணிகள் மோதுவதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் ஆட்டத்தைக் கண்டு களித்தனர். மேலும் இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா வென்றால் அதன் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என பலரும் நினைத்தனர். ஆனால் எதிர்த்து ஆடுவது ஆஸ்திரேலிய அணி என்பதால் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான் தென்னாப்பிரிக்கா வெல்ல வாய்ப்பு உண்டு என்று கூறியவர்களும் உண்டு.

வெற்றி வாய்ப்பு அதிகம் கொண்ட ஆஸ்திரேலிய அணியும், ரசிகர்களின் சப்போர்ட் அதிகம் கொண்ட தென்னாப்பிரிக்க அணியும் மோதும் இந்த ஆட்டத்தில் முதல் வெற்றியாக டாஸை ஜெயித்து பேட்டிங் தேர்ந்தெடுத்தது ஆஸி அணி.

ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரராக வந்த ஹீலி 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதிர்ச்சிகரமாக ஆட்டமிழந்து வெளியேறினார். இன்னொரு பக்கம் முனி 74 ரன்களை விளாசியிருந்தார். 53 பந்துகளைச் சந்தித்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் அவர் வெளியேறினார். மேலும் ஆஸி அணியின் இன்னொரு பேட்டரான கார்ட்னர் 29 ரன்கள் குவித்தார். மொத்தம் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸி அணி 20 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், 156 ரன்கள் எடுத்திருந்தது.

பொதுவான ஆட்டங்களில் இது சாதாரணமாக எட்டக்கூடிய ரன்கள்தான் என்றாலும் ஆஸி அணியின் அதிபயங்கரமான பவுலிங் படையை எதிர்த்து இதை அடிப்பது என்பது சிக்கலான சவாலான விசயம்தான். லாரா 61 ரன்கள் எடுத்து ஆஸி அணிக்கு சிம்மசொப்னமாக விளங்கினார். ஒரு கட்டத்தில் இவரின் அதிரடியால் தென்னாப்பிரிக்க அணி வெல்லும் வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் இவருக்கு பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. இருந்தாலும் 20 ஓவர்களில் 137 ரன்கள் அடித்திருந்தது தென்னாப்பிரிக்கா. ஒரு நல்ல ஓவர் 15,16 ரன்கள் கொண்ட ஓவர் கிடைத்திருந்தாலோ அல்லது நடுவரிசை வீரர்களில் யாராவது ஒருவர் கொஞ்சம் அதிரடி காட்டியிருந்தாலோ தென்னாப்பிரிக்கா வெல்ல மிக அதிக வாய்ப்புகள் இருந்தது.

2010, 2012, 2014, 2018, 2020, 2023 என இரண்டு முறையாக ஹாட்ரிக் அடித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

Tags

Next Story