மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 7வது முறையாக வென்று இந்தியா சாதனை

சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய மகளிர் அணி.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் 8வது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த டி20 தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீகரம் மற்றும் மலேசிய அணிகள் ரவுண்டு ராபின் லீக் சுற்றில் மோதின.
இந்த சுற்றில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெற்றன. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோல்வியை சந்தித்த நிலையில், இந்தியாவும் இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், தொடர்ந்து 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. இந்திய அணியில் ராதா யாதவுக்கு பதிலாக ஹேமலதா சேர்க்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் விளையாடப்போகிறோம் என்ற பதற்றத்துடனே இருந்து வந்தனர்.
தொடக்கம் முதலே தடுமாறிய இலங்கை அணி, இந்தியாவின் பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது மேலும் பதற்றத்தை இலங்கை அணிக்கு கொடுத்தது. தொடக்க வீராங்கனை சம்மாரி அட்டப்பட்டு, அனுஸ்கா ஆகியோர் ரன் அவுட்டாகி வெளியேறியதால், இலங்கை அணிக்கு பெரும் அதிர்ச்சிகரமாக அமைந்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி வீராங்கனைகள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து விளையாடி இலங்கை மகளிர் அணி, ஆட்ட இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 65 ரன்களே எடுத்தது. இதில் அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியாவின் தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளையும், ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து 66 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணியில் செஃபாலி வெர்மா 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஸ்மிருதி மந்தனா அரைசதம், இதனையடுத்து ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஜேமிமா இரண்டே ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் 6 பவுண்டரிகளும், 3 சிக்சருடன் 51 ரன்கள் விளாசினார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 11 ரன்களை எடுத்த நிலையில், இந்திய அணி 8.3வது ஓவரிலேயே 71 ரன்களை குவித்து வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu