மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
ஐசிசி மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்ற , கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும், இந்திய அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற சூழலில் இந்தியா களமிறங்கிஅது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கத்தை தந்தார். அவர், 53 ரன்களுக்கு வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, 71 ரன்கள் குவித்தார். கேப்டன் மிதாலி ராஜ், அசத்தலாக விளையாடி, 68 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில், இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது.
பின்னர், 275 ரன்கள் என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கணை லாவ்ரா 80 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஒருபுறம் ரன்கள் சேர்ந்தாலும், மறுபுறம் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை தென் ஆப்ரிக்கா இழந்ததால், ஆட்டத்தில் கடைசி பந்து வரை பரபரப்பு நிலவியது.
கடைசியில், இரு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நேர்த்தியாக இரு பந்துகளிலும் நேர்த்தியாக தலா ஒரு ரன்கள் எடுத்து, தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. போராடித் தோற்று, இந்தியா வெளியேறியது.
இந்திய அணி தோல்வியை தழுவியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu