குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் பாராட்டு

குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் பாராட்டு
X
மாநில  குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் கரூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் கடந்த டிசம்பர் 23,24 ம் தேதிகளில் மாநில அளவிலான அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு எடை பிரிவில் வீரர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை, திருச்சி, சேலம், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.


இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆர்டினரி பாக்ஸிங் கிளப் பை சேர்ந்த தேசிய குத்துச்சண்டை விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமான எழில் மணியிடம் பயிற்சி பெற்ற குத்துச்சண்டை விளையாட்டு வீரர்கள் அனிரூத் (71-75kg) பிரிவில் தங்கம் யோகேந்திர சாய் (60-63kg) பிரிவில் வெள்ளி பாலநிதிஷ் (54-57kg) பிரிவில் வெள்ளி விஷ்ணு வரதன் 67-71kg)பிரிவில் வெண்கலம் உள்ளிட்ட பதகங்களை பெற்று வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் திருவெறும்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவழகனை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இச்சந்திப்பில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் அமைப்பின் கெளரவ தலைவர் நீதியரசர் எம். கற்பக விநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர். கே. குமார், பொதுச்செயலாளர் டாக்டர் வி.எச்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனைப்படி அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர். ஏ. தாமஸ் ,அமைப்பின் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயிற்சியாளருமான சுரேஷ் பாபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story